விழாக்களும் நினைவுகளும்

வாஷிங்டனில் மழைத்துளி

Raindrops in Washington

புதுக்கவிதை

எங்களை வரவேற்றது வாஷிங்டன் DCபன்னிர்துளிஎன தெளித்தது பனித்துளி,சற்றே தயக்கமுற்றோம் , நடுக்கமும் அடைந்தோம்,சம்பல்எரினகரின் ( ashburn ) மழைதுளிக்கா ? பனித்துளிக்கா ?

இன்று வசந்தத்தின் வாசலில் நிற்கின்றோம்,மலர்கள் பலநிறங்களில் மிளிர்வதை கண்டோம்,எங்கள் எண்ணத்தில் ஓர் மனநிறைவு கொண்டோம்,எங்கள் எண்ணத்தில் புத்துணர்ச்சி கொண்டோம்.

பூத்து குலுங்கும் புதுமலர்கள் அசைய,புதிதாய் தளிர்ந்து, புன்னகை புரிய,மகிழ்ச்சியில் நாங்கள் பூரிப்பு அடைய,வரவேற்றோம் வசந்தமே வருக, வருக என !

— ரா. பார்த்தசாரதி

இன்னொரு கவிதை பறி (random poem)

விழாக்களும் நினைவுகளும் தோட்டத்திலிருந்து

எல்லாம் →