கண்கண்ட தெய்வம் பாபா
Baba, the God Before Our Eyes
கிழக்கிலே ராமகிருஷ்ண பரமஹம்சர் தோன்றினாரேதெற்கிலே ரமணமகரிஷி , ராமலிங்க ரும் தோன்றினரேமேற்கில் ஒரு ஷீரடி பாபா தோன்றினாரேஅவணியிலே தெய்வ அருள்பெற்றனரே !
ஷீரடிலே ஓர் ஷீரடி பாபா ,சாந்தமும், அன்பின் உருவமே பாபா,சாய்பாபாவின் கருணை கவலைகள் தீர்க்குமே ,சமரசமும், தெய்வீகமும் கொண்ட ரூபமே !
அவர் அடிமலரே நமக்கு சரணாலையம்அவர் மக்களின் மனதில் நெஞ்சில் ஓர் ஆலயம்,அவர் கமலபாதம் பணிந்தாலே பாவங்கள் தீருமேஅவரை அனுதினம் வழிபட்டாலே நன்மை அடைவோமே !
பாபாவின் பாதமே நமக்கு துணைஅவர் நாமம் சொல்வதே உற்றத்துனைஅன்பே கடவுள் , அருளே அவர் வடிவம்.அவரே ஞாலத்தின் கண்கண்ட தெய்வம்!
— ரா. பார்த்தசாரதி